என்ன செய்யப் போகிறது மதிமுக? மதுவிலக்கு அமலாகுமா? கொள்கையிலிருந்து விலகலா? இன்று வெளியாகிறது தேர்தல் அறிக்கை!

 

எப்படியிருந்த வைகோ இப்படி ஆகிவிட்டார் என்று பாஜக அண்ணாமலை கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூறியது தான் மதிமுக தொண்டர்களின் நிலையாகவும் எதிரொலிக்கிறது. திமுகவையும், ஸ்டாலினின் வாரிசு அரசியலையும் எதிர்த்து கட்சி துவங்கியவர், திமுகவை எதிர்த்து அவரது உணர்ச்சிகரமான பேச்சால் தூண்டப்பட்டு, தீக்குளித்து உயிரிழந்தவர்கள் எத்தனைப் பேர்? அத்தனைப் பேரின் உயிர்களையும் காவு வாங்கிய கட்சி, இப்படி தேய்ந்து.. தேய்ந்து... மகனுக்கு சீட்டுக்காக மொத்தமா காலிலேயே விழுந்து விட்டதே என்று தொண்டர்கள் அங்கலாய்க்கின்றனர். 

இந்நிஐயில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) தேர்தல் அறிக்கை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. பூரண மதுவிலக்கு அமல் என்று திமுக கூட்டணியில் இருந்துக் கொண்டு தேர்தல் அறிக்கை வெளியிடுவாரா என்று சமூக வலைத்தளங்களில் இப்போதில் இருந்தே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான 'தாயகத்தில்' இன்று நடைபெறும் நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

மத்திய - மாநில அரசு உறவுகள் மற்றும் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான திட்டங்கள். காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற நதிநீர் பிரச்சனைகளில் தமிழகத்தின் நிலைப்பாட்டை உறுதி செய்தல். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான மதிமுக-வின் நீண்ட காலக் கோரிக்கைகள். இளைஞர் மற்றும் விவசாய நலன்: வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டங்கள்.

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இறுதியாகி வரும் சூழலில், தனது கட்சியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இந்தத் தேர்தல் அறிக்கை ஒரு முக்கியக் கருவியாக அமையும் என்று வைகோ கருதுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, திமுக-வின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற வேண்டிய சில முக்கிய அம்சங்கள் குறித்து வைகோ ஆலோசனைகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.