இனி வாட்ஸ்அப் செயலியில் கட்டணங்களைச் செலுத்தலாம்... பயனர்கள் வரவேற்பு!
Sep 3, 2026, 19:45 IST
மத்திய அரசின் 'Bharat Connect' தளத்தின் வாயிலாக வாட்ஸ்அப் செயலியிலேயே பயன்பாட்டுக் கட்டணங்களை நேரடியாகச் செலுத்தும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரம், சமையல் எரிவாயு (LPG), FASTag, காப்பீடு மற்றும் கடன் தவணை உள்ளிட்ட 30 முக்கிய பிரிவுகளில் உள்ள 22,722-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கட்டணங்களை மக்கள் இதன் மூலம் செலுத்த முடியும்.
பயனர்கள் தங்களது கட்டணங்களை UPI, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாட்ஸ்அப் செயலி மூலமாகவே எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய வசதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.