ஏஐ வீடியோக்களை அடையாளம் காண வாட்ஸ்அப்பில் புதிய லேபிள் வசதி அறிமுகம்!

 

வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் மற்றும் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை எளிதில் அறியும் வகையில் புதிய 'ஏஐ கன்டென்ட் லேபிள்' வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

வாட்ஸ்அப் வாயிலாக மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்யப்படும் அல்லது அப்லோடு செய்து அனுப்பப்படும் மீடியா கோப்புகளில், அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டிருந்தாலோ அல்லது எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டிருந்தாலோ இனி 'ஏஐ கன்டென்ட் லேபிள்' முத்திரை இடப்படும்.

இந்த புதிய பாதுகாப்பு அம்சத்தின் மூலம், ஒரு குறிப்பிட்ட வீடியோ அல்லது புகைப்படம் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலியான உள்ளடக்கமா அல்லது உண்மையானதா என்பதைப் பயனர்கள் மிகவும் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும். இது போலித் தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.