வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்... இனி ஸ்டேட்டஸ் வைப்பதில் பெரும் மாற்றம்... நெருக்கமானவர்களை அலர்ட் செய்யலாம்!
உலகம் முழுவதும் 300 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி, தகவல் பரிமாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ, மற்றும் கால் வசதி உள்ளிட்ட பல அம்சங்களை வழங்கி வரும் இந்த தளம், பள்ளி மாணவர்கள் முதல் அலுவலக ஊழியர்கள் வரை அனைவரின் தினசரி வாழ்வின் அங்கமாகி விட்டது.
இந்நிலையில், வாட்ஸ்அப்பைச் சொந்தமாகக் கொண்ட மெட்டா நிறுவனம் தற்போது புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட்டின் மூலம், நமக்கு நெருக்கமான நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஸ்டேட்டஸ் பதிவிட்டால், உடனடியாக அதற்கான *அலர்ட்* வரும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அவர்கள் ஸ்டேட்டஸ்களை உடனே பார்த்து அறிந்து கொள்ளலாம்.
இந்த புதிய அம்சம், அனைவரின் ஸ்டேட்டஸ்களையும் பார்ப்பதற்கு விருப்பமில்லாமல், தங்களுக்கு பிடித்த சிலரின் பதிவுகளை மட்டும் பின்தொடர விரும்பும் பயனர்களுக்கு சிறப்பான அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் தெரிவித்ததாவது, “இந்த வசதி தற்போது கட்டம் கட்டமாக வெளியிடப்பட்டு வருகிறது. விரைவில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பயனர்களுக்கும் இது கிடைக்கும்,” என தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!