“ஆட்சியில் இல்லாதப்போ வந்து சந்திச்சீங்க..” முதல்வர் விஜய்க்கு சரமாரி கேள்வி!

 

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 8-வது நாளாக நீடித்து வரும் நிலையில், அவர்கள் முதலமைச்சர் விஜய்க்கு எதிராகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பனையூரில் தங்களுக்கு ஆதரவு தெரிவித்த முதலமைச்சர் விஜய், தற்போது முதலமைச்சரான பிறகு தங்களைச் சந்திக்க மறுப்பதாகவும், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் என்னவானது என்றும் பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தங்களைக் குப்பையைப் போல் அரசாங்கம் நடத்துவதாகத் தெரிவித்த அவர்கள், முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசும் வரை தங்களது போராட்டம் எந்தக் காரணத்தைக் கொண்டும் கைவிடப்படாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.