ஒமிக்ரான்: அபாய கட்டத்தில் உலகம்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்றின் பரவல் உலக அளவில் வேகம் எடுத்துள்ளது என ஐ.நா. உலக நாடுகளை எச்சரித்துள்ளது.
உலகை முடக்கிய கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து அனைத்து நாடுகளும் மெல்ல மெல்ல மீண்டு வந்தன. முழுமையாக மீளும் முன்பே ஒமிக்ரான் வைரஸ் உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சில நாடுகளில் டெல்டா, சில நாடுகளில் ஒமிக்ரான் என போட்டி போட்டுக் கொண்டு பாதிப்புகளை ஏற்பத்தி வருகின்றன. டெல்டாவை விட ஒமிக்ரான் வேகமாக பரவும் என விஞ்ஞானிகள் பலரும் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸின் பரவலானது உலக அளவில் வேகம் எடுத்து அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்டாவை விட ஒமிக்ரான் பரவல் விகிதம் பல்வேறு நாடுகளில் அதிகரித்துள்ளது எனவும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.