அமித் ஷாவைச் சந்தித்தது ஏன்? கனிமொழி விளக்கம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசியது குறித்துக் கனிமொழி விளக்கமளித்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதாவில் தமிழகத்திற்கு 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்க உள்ளதால், அம்மசோதாவுக்குத் திமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது டி.ஆர். பாலு, ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் உடனிருந்தனர்.
தொகுதி மறுவரையறை மசோதாவின் கீழ் தமிழகத்திற்கு 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்க உள்ளதால், திமுக இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கனிமொழி தெளிவுபடுத்தியுள்ளார். தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.