"காவிரி உரிமையில் தமிழக அரசு ஏன் மௌனம்?" - திமுக நிர்வாகி ராஜீவ்காந்தி கேள்வி!

 

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக மக்களின் வாழ்வாதாரமும் குடிநீரும் கேள்விக் குறியாகியுள்ள நிலையிலும் முதலமைச்சர் மௌனம் காப்பதாகத் திமுக கொள்கைப்பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

காவிரி நீர் என்பது தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு மட்டும் உயிர்நாடி அல்ல; டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களின் முதன்மையான குடிநீர் ஆதாரமும் அதுவே ஆகும். உணவுக்கும் குடிநீருக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ள இந்தச் சூழலிலும், தமிழக மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்காமல் முதலமைச்சர் அமைதி காத்து வருகிறார்.

காவிரி உரிமைகளுக்காகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய காலத்தில், நீர்வளத் துறை அமைச்சர் சிரித்துக் கொண்டு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார். தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளைப் பாதுகாக்கவும், குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளை உறுதி செய்யவும் தமிழக அரசு இனிமேலாவது மெத்தனப் போக்கைக் கைவிட்டு, ஒன்றிய அரசு மற்றும் கர்நாடக அரசுக்கு எதிராகத் தனது வலிமையான குரலை உயர்த்த வேண்டும் என்று ராஜீவ் காந்தி வலியுறுத்தியுள்ளார்.