மனைவியின் கள்ளக்காதல்... நண்பனின் கை,கால்களை கட்டி அடித்த கொடூரம்!

 

மனைவியின் கள்ளக்காதல் குறித்த சந்தேகத்தில் நண்பனின் கை, கால்களை கட்டி அடித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (42). இவரது நெருங்கிய நண்பர் ஐயப்பன். இருவரும் குடும்ப நண்பர்கள். நேற்று ஐயப்பன்குடிபோதையில் முதலில் வீட்டில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பிறகு அங்கிருந்து கிளம்பி, சௌந்தரராஜன் வீட்டிற்கு சென்று “உனக்கும் என் மனைவிக்கும் என்ன தொடர்பு?” என கேட்டுள்ளார்.

தொடர்ந்து சௌந்தரராஜனிடம் கேள்வி கேட்டு தகராறு செய்தார். பின்னர் நேற்று இரவு உளுந்தூர்பேட்டைக்கு மளிகை பொருட்கள் வாங்க வந்த ஐயப்பனை வழிமறித்து மீண்டும் அவரிடம் தகராறு செய்தார். உறவினர்களுடன் சேர்ந்து, சௌந்தரராஜனின் கை, கால்களை கட்டி, கடுமையாக தாக்கினார். பின்னர், தாக்குதலின் போது, அவர் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சௌந்தரராஜனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்