undefined

நான் எதிர்பார்த்தது ஆறுதல் மட்டுமே ... பணமல்ல... விஜய் வழங்கிய ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை திருப்பி அனுப்பிய கரூர் உயிரிழந்தவரின் மனைவி!

 

கரூரில் தவெக பிரசார நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரமேஷின் மனைவி சங்கவி, தவெக தலைவர் விஜய் வழங்கிய ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை திருப்பி அனுப்பியுள்ளார். செப்டம்பர் 27 அன்று நடந்த நிகழ்ச்சியில் கோடங்கிப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கடந்த 19 ஆம் தேதி விஜய் சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் அவரது வங்கிக் கணக்கில் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து சந்தித்தார். ஆனால் சங்கவிக்குத் தெரியாமல் அவரது மூன்று உறவினர்கள் தவெக நிர்வாகிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த சங்கவி, விஜய் அனுப்பிய ரூ.20 லட்சத்தையும் அதே வங்கிக் கணக்குக்கே திருப்பி அனுப்பினார்.

இதுகுறித்து சங்கவி தெரிவித்ததாவது, “விஜய் கரூருக்கு வந்து நேரில் ஆறுதல் கூறுவதாகக் கூறியிருந்தார். ஆனால் அவர் வரவில்லை. நான் எதிர்பார்த்தது பணம் அல்ல, ஆறுதல் மட்டுமே. அதனால் நிவாரணத் தொகையை திருப்பி அனுப்பியுள்ளேன்,” என்று தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!