தவெக நிர்வாகியுடன் மனைவி தகாத உறவு: கரூர் அருகே கணவன் தற்கொலை முயற்சி!
கரூர் அருகே தனது மனைவி, தவெக நிர்வாகியுடன் தகாத உறவில் இருந்ததைக் கண்டு மனமுடைந்த லாரி ஓட்டுநர், வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (28). லாரி ஓட்டுநரான இவருக்கும் தனலட்சுமி என்ற பெண்ணிற்கும் திருமணமாகி வாழந்து வந்தனர். இந்நிலையில், தனலட்சுமிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியான முத்துசாமி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ராஜலிங்கம் தற்கொலைக்கு முயலும் முன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவில், தனது மனைவியும் முத்துசாமியும் உல்லாசமாக இருந்த வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், இதற்குப் பிறகும் தான் உயிரோடு வாழ்வதில் அர்த்தமில்லை என்றும் உருக்கமாகப் பேசியுள்ளார்.
பின்னர் விஷம் அருந்தித் தற்கொலைக்கு முயன்ற அவரை, உறவினர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.