இந்தியாவின் பதக்கப்பட்டியல் உயருமா? எகிறும் எதிர்பார்ப்பு... இன்று ஆசிய விளையாட்டில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கியப் போட்டிகள்!

 

ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இன்று பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

வில்வித்தை: ரிகர்வ் ஆண்கள் தனிநபர் தொடக்க சுற்று (நீரஜ் சவுகான், தீரஜ் பொம்மதேவரா) - அதிகாலை 5:30 மணி.

ரிகர்வ் பெண்கள் தனிநபர் தொடக்க சுற்று (கும்கும், கீர்த்தி) - காலை 9:45 மணி.

டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று (தஷினேஸ்வர்) - காலை 10:00 மணி. சுமித் நாகல் - பிற்பகல் 12:30 மணி.

துப்பாக்கி சுடுதல்: டிராப் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனிநபர் தகுதி சுற்று மற்றும் அணிகள் இறுதிப்போட்டி (அவார் ரிஸ்வி, கைனென் செனாய், ஷபத் பரத்வாஜ், நீரு, மனிஷா கீர், ஆஷிமா ஆசியாவத்) - காலை 6:30 மணி முதல்.

ஸ்குவாஷ்: பெண்கள் லீக் சுற்று (இந்தியா - ஈரான்) - காலை 6:30 மணி.

குத்துச்சண்டை (அரையிறுதிப் போட்டிகள்): பெண்கள் 65 கிலோ பிரிவு (பர்வீன் - லி ஷூ/சீனா) - காலை 10:15 மணி.

ஆண்கள் 80 கிலோ பிரிவு (அங்குஷ் - பஸ்லித்தின் எர்கின்போவ்/உஸ்பெகிஸ்தான்) - காலை 11:00 மணி.

ஆண்கள் 90 கிலோவுக்கு மேற்பட்டோர் பிரிவு (நரேந்தர் - ஐபெக் ஓரல்பே/கஜகஸ்தான்) - காலை 11:30 மணி.

கைப்பந்து: ஆண்கள் லீக் சுற்று (இந்தியா - கத்தார்) - பிற்பகல் 12:30 மணி.

தடகளம்: ஆண்கள் போல்வால்ட் இறுதிப்போட்டி (தேவ்குமார் மீனா, குல்தீப் குமார்) - பிற்பகல் 2:50 மணி.

பெண்கள் உயரம் தாண்டுதல் (பூஜா, சுப்ரியா பசவராஜூ) - மாலை 3:35 மணி.

பெண்கள் சங்கிலி குண்டு எறிதல் (அனுஷ்கா யாதவ், தன்யா சவுத்ரி) - மாலை 4:05 மணி.

பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டம் (கவுதமி, பூஜா) - மாலை 4:20 மணி.

ஆண்கள் 800 மீட்டர் ஓட்டம் (முகமது அப்சல்) - மாலை 4:35 மணி.

ஆண்கள் 5,000 மீட்டர் ஓட்டம் (குல்வீர் சிங், அவினாஷ் சாப்ளே) - மாலை 4:45 மணி.

பெண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் - மாலை 5:35 மணி.