சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படுமா? - அமைச்சர் நிர்மல்குமார் பதில்
மறைந்த புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை மதுரையில் உள்ள சாலமன் பாப்பையா இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர் நிர்மல்குமார், அவருக்கு அரசு மரியாதை வழங்கப்படுவது குறித்து அரசு தரப்பில் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். "இவருக்கு இல்லாத மரியாதை வேறு யாருக்குத் தர முடியும்" எனக் கூறி திருச்சி சிவா தனது உயர்வான மதிப்பைப் பதிவு செய்துள்ளார்.
தமிழ்த் துறைக்கும் பட்டிமன்றக் கலைக்கும் அவர் ஆற்றிய அரும்பெரும் சேவைகளைக் கவுரவிக்கும் வகையில், அவருக்கு முழு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.