"பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிட்டுப் போனால் பாவங்கள் போயிடுமா?" - முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் கண்டனம்!
காவிரி விவகாரத்திலும் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையிலும் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாகக் குற்றம்சாட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 'எக்ஸ்' தளத்தில் காரசாரமான அறிக்கையை வெளியிழந்துள்ளார்.
காவிரிப் படுகை விவசாயிகளின் உரிமைகளை மீட்டெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தஞ்சாவூரில் திமுக சார்பில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணிக் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஜூன் 12-ல் வரவேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை. ஆடிப்பெருக்கு நாளில் வழக்கமாகப் பொங்கி வரும் காவிரி நீரைக் களிப்புடன் வரவேற்கும் டெல்டா விவசாயிகள், தவெக ஆட்சியின் சோம்பேறித்தனத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர் எனக் குற்றம்சாட்டினார். கர்நாடக அரசு மேகதாது அணைக் கட்டுவதில் பிடிவாதமாக இருந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ள நிலையில், தமிழக அரசு இங்கு அதுபோன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி குரல் கொடுக்கத் தவறிவிட்டது.
அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காகத் தமிழக விவசாயிகளின் வாழ்க்கையை அடகு வைக்கப் பார்க்கிறீர்களா என்றும், முழுக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை அளித்துவிட்டுத் தவெக அரசு ஏமாற்றி வருகிறது என்றும் விமர்சித்தார்.
"விவசாயிகளைச் நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல், வரவிருக்கும் வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிக்கொண்டு ஓடினால் செய்த பாவங்கள் தீர்ந்துவிடுமா?" என்றும், 'கத்தி' திரைப்படத்தில் தன்னூத்து விவசாயியாக நடித்தவர் நிஜத்தில் நாக்பூரில் விவசாயிகள் கைது செய்யப்பட்டபோது அமைதி காப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். குறுவைச் சாகுபடிக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களைப் உடனடியாக வறட்சிப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும். காவிரியில் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ உரிமைகளை மீட்டெடுக்கும் வரை திமுகவின் தொடர் போராட்டங்கள் ஓயாது என மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.