"பிகினியுடன் தான் ராக்கி கட்டுவீங்களா?” - சர்ச்சையைக் கிளப்பிய வீடியோ – நடிகை கங்கனா ரனாவத்துக்கு க்ரித்தி சனோன் பதிலடி!

 

விளம்பரம் ஒன்றில் நடிகை க்ரித்தி சனோன் அணிந்திருந்த உடையை மையமாக வைத்து, நடிகை கங்கனா ரனாவத் மற்றும் க்ரித்தி சனோன் இடையே சமூக வலைத்தளங்களில் ஆடை தொடர்பான காரசாரமான விவாதம் எழுந்துள்ளது.

விளம்பரம் ஒன்றில் க்ரித்தி சனோன் அணிந்திருந்த உடையைக் குறிப்பிட்டு, "பிகினியுடன் தான் ராக்கி கட்டுவீர்களா? அது அருவருப்பானது" என நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.


கங்கனாவின் இந்த விமர்சனத்திற்குப் பதிலளித்த க்ரித்தி சனோன், "கலாச்சாரமும் பாரம்பரியமும் நாம் அணியும் ஆடை அலங்காரத்தில் இல்லை; அது ஒருவரின் இதயத்தில் தான் உள்ளது" எனக் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்துச் சமூக வலைத்தளங்களில் இரு நடிகைகளின் ரசிகர்களும் இரு பிரிவாகப் பிரிந்து, தங்களது ஆதரவுகளையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.