துணி காயப்போடும்போது ஹெல்மெட்டால் தாக்கப்பட்ட பெண் பலி - போலீசார் விசாரணை!
Sep 2, 2026, 13:40 IST
சென்னை மேடவாக்கம் நன்மங்கலம் பகுதியில் துணி காயப்போடும்போது ஏற்பட்ட தகராறில் ஹெல்மெட்டால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேடவாக்கம் நன்மங்கலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மஞ்சுளா (47) என்பவர் துணி காயப்போடும்போது, அதே பகுதியைச் சேர்ந்த விஜி (45) என்பவருக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த விஜி, மஞ்சுளாவை ஹெல்மெட்டால் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த மஞ்சுளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விஜியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.