கணவனைக் கூலிப்படை ஏவி கொலை செய்த தவெக பெண் நிர்வாகி!

 

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிரபல ரவுடியை, அவரது மனைவியான தவெக நிர்வாகியே கூலிப்படை வைத்துப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூதப்பாண்டி அருகே உள்ள புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புதூர் மணிகண்டன் (எ) சுரேஷ். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இக்கொலை சம்பவம் குறித்துப் பூதப்பாண்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிகண்டனின் மனைவியும், தவெக மாவட்ட மகளிரணி இணைச் செயலாளருமான பாரதி என்பவரே இக்கொலைக்கு முக்கியக் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்துப் பாரதியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குடும்பத் தகராறு மற்றும் மணிகண்டனின் சட்டவிரோதச் செயல்பாடுகள் காரணமாகக் ஆத்திரமடைந்த பாரதி, கூலிப்படையை ஏவி இக்கொலையை அரங்கேற்றியதாகக் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய பிற நபர்களையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.