undefined

ஆபாச வீடியோ வழக்கில் பெண் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் கைது!

 

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ஆபாச வீடியோ விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. நயனா மோட்டம்மா அவர்களின் உதவியாளராக ஆதித்யா பணியாற்றி வந்தார். இவர் சிக்கமகளூரு ஆதிசக்தி நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் நெருக்கமாக பழகி, பின்னர் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவை சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் என மிரட்டி, அந்த பெண்ணை தொந்தரவு செய்ததோடு, அந்த வீடியோக்களை அவளது உறவினர்களுக்கும் அனுப்பி அவமானப்படுத்தியுள்ளார். இதனால் மனஅழுத்தமடைந்த பெண் சிக்கமகளூரு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆதித்யாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் ஆபாச வீடியோ எவ்வாறு பெற்றார், யாருடன் பகிர்ந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?