சாப்ட்வேர் இன்ஜினீயரிடம் ரூ.14 கோடி மோசடி செய்த பெண் சாமியார்!

 

மகள்களின் உடல்நலக் கோளாறால் கவலைக்குள்ளான சாப்ட்வேர் இன்ஜினீயரிடம், தெய்வீக சக்தி மூலம் நோய் குணமாக்குவதாக நம்பிக்கை ஏற்படுத்தி, பெண் சாமியார் ஒருவர் ரூ.14 கோடி மோசடி செய்த சம்பவம் புனேவில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

நாசிக்கில் வசிக்கும் வேதிகா என்ற பெண் சாமியார், புனேயைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் தீபக் தோலாஸ் என்பவரை சந்தித்து, அவரது இரண்டு மகள்களும் தன்னுடைய ஆன்மீக பூஜைகளால் குணமடைவார்கள் என நம்பூட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதன் பேரில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறப்பு பூஜை, தவம், யாகம் என்று கூறி மொத்தம் ரூ.14 கோடி பெறப்பட்டதாக தகவல்.

தீபக் தோலாஸ், இங்கிலாந்தில் வேலை பார்த்த காலத்தில் வாங்கிய வீடும், தாயகம் உள்ள நிலமும் விற்று, அந்த தொகையை சாமியாரிடம் ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், நீண்டகாலத்திற்குப் பிறகும் அவரது மகள்களின் நிலைமையில் மாற்றம் இல்லாததால் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது சாமியார் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும், இதனாலேயே தாம் மோசடிக்கு உள்ளானதை புரிந்துகொண்டதாகவும் புகார் வழங்கியுள்ளார்.

புகார் அளித்ததை அடுத்து புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் உத்தரவின் பேரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேதிகா மற்றும் அவரது கூட்டாளிகள் தீபக் கட்கே, குணால் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உண்மையான பாதிப்புக்கு சிகிச்சை தேவைப்படும் நேரத்தில், ஆன்மீக பெயரில் நடந்த இந்த நம்பிக்கை மோசடி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!