undefined

  ஓடும்  ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை... பரபரப்பு !

 

நமோ பாரத் அதிவேக ரயிலின் பிரீமியம் பெட்டியில் நடந்த தனிப்பட்ட சம்பவம், பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நகரும் பெட்டிக்குள் இருந்த இளம் ஜோடியின் செயலை, ரயில் இயக்குநர் ஒருவர் CCTV நேரடி காட்சியிலிருந்து மொபைலில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதுடன், கடும் விமர்சனமும் எழுந்தது.

இந்த சம்பவம் கடந்த நவம்பர் 24-ம் தேதி துஹாய்–முராத்நகர் இடையே நடந்ததாக NCRTC தெரிவித்துள்ளது. விதிகளை மீறி காட்சிகளை பதிவு செய்து பகிர்ந்ததாக, இயக்குநர் ரிஷப்பை பணிநீக்கம் செய்து, அவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட இளம் ஆண், பெண்ணும் அடையாளம் தெரியாதவர்களாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

NCRTC விதிமுறைகளின்படி கண்காணிப்பு காட்சிகளை பதிவு செய்வதும் பகிர்வதும் கடும் தடை. இந்த வழக்கில் BNS மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஜோடியை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தனியுரிமை மீறல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என NCRTC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.