மகளிர் உரிமைத்தொகை இன்று வங்கிக் கணக்குகளில் வரவு!
Updated: Sep 12, 2026, 07:14 IST
தமிழக அரசின் புகழ்பெற்ற திட்டமான மகளிர் உரிமைத் தொகை, செப்டம்பர் மாதத்திற்கான தொகையை நான்கு நாட்களுக்கு முன்பாகவே அரசு பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான உதவித்தொகை வழக்கமான நாளுக்கு முன்பாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி பல பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு இந்தத் தொகை வரவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. தங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட பலரும் சமூக வலைதளங்களிலும் அதிகாரிகளிடமும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.