செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைக்க வழங்கப்பட்ட பணி ஆணை ரத்து!

 

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த மெகா விளையாட்டு நகரத்துக்கான (Mega Sports City) பணி ஆணையைத் தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று கடந்த 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, செம்மஞ்சேரி, வண்டலூர், குண்டம்பாக்கம் ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு செம்மஞ்சேரி தேர்வு செய்யப்பட்டது.

112 ஏக்கர் பரப்பளவில் ரூ.206 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு நகரம் அமைப்பதற்காக 'ஆர்பிபி' என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த பணி ஆணையைத் தற்போது தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.