328 அடி ஆழத்தில் சிக்கிய தொழிலாளர்கள்... இந்தோனேஷியாவில் தங்கச்சுரங்கத்தில் சிக்கி 13 பேர் பலி; எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரம்!

 

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிற்குத் தெற்கே சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள போங்கோர் மலைப்பகுதியில், சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கத்தில் கனமழை காரணமாகத் திடீரென வெள்ளம் புகுந்தது. இந்த விபத்தில் பூமிக்கு அடியில் சுமார் 100 மீட்டர் (328 அடி) ஆழத்தில் சிக்கிய 26 தொழிலாளர்களில் 13 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 13 பேரைப் பத்திரமாக மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவிற்குத் தெற்கே சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள போங்கோர் மலைப்பகுதியில் சட்டவிரோதமாகத் தங்கச் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இப்பகுதியில் பெய்த கனமழையால் சுரங்கத்திற்குள் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ள நீரில் சிக்கி 26 தொழிலாளர்கள் பூமிக்கு அடியில் சுமார் 100 மீட்டர் (328 அடி) ஆழத்தில் மாட்டிக்கொண்டனர். இதில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள எஞ்சிய 13 தொழிலாளர்களை உயிருடன் மீட்க மீட்புக் குழுவினர் தொடர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு வசதிகளின்றிச் சட்டவிரோதமாக இயங்கி வந்த சுரங்கத்தில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.