உலகக் கோப்பை கேரம்... 3 தங்கம் வென்று சென்னை வீராங்கனை கீர்த்தனா அசத்தல்!
மாலத்தீவில் நடைபெற்ற 7-வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் தொடரில், சென்னை காசிமேட்டைச் சேர்ந்த இளம் வீராங்கனை கீர்த்தனா லோகநாதன் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இந்தத் தொடரில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர்.
மகளிர் பிரிவில் கீர்த்தனா பின்வரும் மூன்று பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சக இந்திய வீராங்கனை காஜல் குமாரியை வீழ்த்தி மகளிர் ஒற்றையர் பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றார். கீர்த்தனா - காஜல் குமாரியைக் கொண்ட ஜோடி, மற்றொரு இந்திய ஜோடியான மித்ரா - காசிமாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. கீர்த்தனா உட்பட 4 பேர் கொண்ட இந்திய அணி, மாலத்தீவை வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றது.
கடந்த உலகக் கோப்பையில் தங்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த காசிமா, இந்த முறை ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். காசிமாவின் தந்தையும், கேரம் பயிற்சியாளருமான மெஹபூப் பாஷாவிடம் தான் கீர்த்தனா பயிற்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 21 வயதான கீர்த்தனா மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவரது குடும்பம், இரண்டு தம்பிகளின் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருகிறது. இவர் 8 வயதிலிருந்தே கேரம் விளையாடி வருகிறார்.
கடந்த 8 மாதங்களுக்கு முன் டெல்லியில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் தொடரில், உலக சாம்பியனை வீழ்த்தித் தேசிய கேரம் போட்டியனாக கீர்த்தனா உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!