undefined

உலக புகழ்பெற்ற ஓவிய நிகழ்ச்சி.. 1000 கோடிக்கு மேல் ஏலம் விடப்படும் பிகாசோவின் ஓவியம்..!!

 
அமெரிக்காவில் புகழ்பெற்ற ஓவியம் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 8ம் தேதி தலை சிறந்த ஓவியங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி ஒன்று தொடங்கவுள்ளது. இங்கு உலக புகழ் பெற்ற ஓவியர்களின் பல்வேறு ஓவியம் ஏலம் விடப்பட்டுள்ளது. 

இந்த ஏல நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோவின் தலைசிறந்த ஓவியம் ஒன்றும் ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஓவியம் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் பிரபல ஆப்பிரிக்க அமெரிக்க ஓவியரான ஜீன்-மைக்கேல் பாஸ்குயட் 1982ல் வரைந்த 8 அடி உயரமுள்ள ஓவியமும் ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஓவியம் 499 கோடி ரூபாய் ஏலம் போக உள்ளதாக அறியப்படுகிறது.