உலக ஜூனியர் தடகள போட்டி.. தமிழகத்தில் இருந்து 10 வீரர்கள் தேர்வு!
Aug 4, 2026, 08:30 IST
அமெரிக்காவின் யுஜின் நகரில் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ள உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான 36 பேர் கொண்ட இந்திய அணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய தடகள அணியில் தேர்வாகியுள்ள தமிழக வீரர், வீராங்கனைகள் யூவின் ஆனந்த், ஜித்தின், நீல்ஸ் சாம்ராஜ், ரஞ்சித்குமார், நகுல் பிரபு, தரணிதரன், அம்ரிஷ், ரோய்ஷன், பவானா, தியா ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
அகில இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 36 பேரில் 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தேசிய அணியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 30 சதவீதமாக உள்ளது. இளம் வீரர்களின் திறமையை சர்வதேச மேடையில் நிரூபிக்கவும், ஒலிம்பிக் போன்ற உயர்மட்டப் போட்டிகளுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் இந்தப் போட்டி ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும்.