சுவீடனில் பனிக்கட்டியால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் 'ஐஸ் ஓட்டல்'!

 

வடக்கு சுவீடனில் 1989-ஆம் ஆண்டு பனிக்கட்டியால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் ‘ஐஸ் ஓட்டல்’ இயங்கி வருகிறது. இந்த ஓட்டல் எப்போதும் மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்கப்படுகிறது. கோடைகாலத்தில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி இந்த ஓட்டல் உருகாமல் பராமரிக்கப்படுகிறது.

வசந்த காலத்தில் உருகும் இந்த ஓட்டல், ஒவ்வொரு ஆண்டும் புதிதாகக் கட்டமைக்கப்படுகிறது. சுவீடனின் 7 அதிசயங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இம்மாபெரும் ஐஸ் ஓட்டல், இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான சர்வதேச விருந்தினர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது.