undefined

 பிரபல உணவகத்தில் பிரியாணியில் புழு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

 
 சென்னையில்  வீதிக்கு ஒரு பிரியாணி கடை என்ற நிலை மாறி தெருவுக்கு 4 என்ற நிலை அதிகரித்து வருகிறது. உணவுப்பிரியர்கள் தேவை  என்ற நிலை மாறி வியாபார நோக்கத்தோடு இதில் பல உணவகங்கள் செயல்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில்  மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு கிளைக்கு இரு நாள்களுக்கு முன்பு சத்ய பிரகாஷ், நிபி நெல்சன் ஆகியோா் சாப்பிடச் சென்றனா்.


அவா்களுக்கு பரிமாறப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததாகக் கூறி உணவக ஊழியா்களிடம் புகார் தெரிவித்தனர்.  கடைஊழியா்கள் சரியாக பதில் அளிக்காததால், தகுந்த ஆதாரங்களுடன் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகாா் அளித்தனா்.இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார்  மற்றும் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் சதாசிவம், அந்த உணவகத்தில் சோதனை மேற்கொண்டனா்.


சமையல் கூடம், உணவுப் பொருட்கள் அனைத்தையும் ஆய்வு செய்த அதிகாரிகள், புழு இருந்ததாகக் கூறப்பட்ட உணவின் மாதிரியை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.  கடையை தற்காலிகமாக மூடி, கடையை நன்றாக சுத்தம் செய்த பிறகு அனுமதி பெற்று மீண்டும் திறக்க வேண்டும் ” என எச்சரிக்கை விடுத்து  நோட்டீஸ் வழங்கினா்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!