பிரபல மல்யுத்த வீரர் திடீர் மரணம்... போட்டி முடிந்த சில நிமிடங்களில் அதிர்ச்சி!

 

 

பிரபல தொழில்முறை மல்யுத்த வீரரான பெஞ்சமின் சடர்லி தனது 40-வது வயதில் திடீரென உயிரிழந்த சம்பவம் மல்யுத்த ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தின் நியூகேஸில் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின் சடர்லி, மல்யுத்த உலகில் ‘Pac’ என்ற ரிங் பெயரில் பிரபலமானவர். ‘The Man That Gravity Forgot’ என்ற புனைப்பெயராலும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

2004-ம் ஆண்டு தனது மல்யுத்த பயணத்தை தொடங்கிய அவர், பல்வேறு சர்வதேச மல்யுத்த அமைப்புகளில் போட்டியிட்டு உலக அளவில் கவனம் பெற்றார். WWE-யில் ‘Adrian Neville’ என்ற பெயரில் போட்டியிட்ட அவர், பின்னர் All Elite Wrestling (AEW) அமைப்பில் இணைந்து பல முக்கிய பட்டங்களையும் வென்றுள்ளார்.

இந்த நிலையில், சிகாகோவில் நடைபெற்ற AEW ‘All Out’ நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை பெஞ்சமின் சடர்லி போட்டியிட்டார். AEW National Championship போட்டியில் Andrade El Ídolo-வை எதிர்த்து களமிறங்கிய அவர், அந்தப் போட்டியில் தோல்வியடைந்தார்.

போட்டி நடைபெற்ற மறுநாளே அவரது மரணம் குறித்த தகவல் வெளியாகி மல்யுத்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மரணத்தை AEW அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.எனினும், பெஞ்சமின் சடர்லியின் மரணத்திற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. குக் கவுன்டி மருத்துவ பரிசோதகர் அலுவலகமும் மரணத்திற்கான காரணத்தை உடனடியாக தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

AEW சார்பில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஞ்சமின் சடர்லியின் மறைவுக்கு சக மல்யுத்த வீரர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இளம் வயதிலேயே, அதுவும் போட்டியில் பங்கேற்ற மறுநாளே பிரபல மல்யுத்த வீரர் உயிரிழந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.