மல்யுத்த வீரர் ‘ தி கிரேட் காளி’ கார் மோதி விபத்து... பகீர் சிசிடிவி காட்சிகள் !
அரியானா மாநிலம் பானிபட் சுங்கச்சாவடி அருகே முன்னாள் டபிள்யூ.டபிள்யூ.இ (WWE) பிரபலமும், மல்யுத்த வீரருமான 'தி கிரேட் காளி' எனப்படும் திலீப் சிங் ரானா சென்ற எஸ்.யூ.வி கார் மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டது.
எனினும், இந்த விபத்தில் காளி எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவில், இது ஒரு சிறிய விபத்து மட்டுமே என்றும், தான் முழு நலமுடன் இருப்பதாகவும் ரசிகர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியதைக் தொடர்ந்தே தான் விளக்கமளிக்க வேண்டியதாய்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களின் அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் அவர் தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.