“தவறான ஆசை.. விஜயால் எந்தக் காலத்திலும் பிரதமராக முடியாது” - கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

 

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மதுரை செய்தியாளர்களிடம் பேசும்போது, முதலமைச்சர் விஜய் தேசிய அளவில் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவது தவறு என்றும், அகலக் கால் வைத்தால் அது அவருக்கே ஆபத்தாக முடியும் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் மற்றும் சர்வதேச தலைவர் ஆவதெல்லாம் தவறான ஆசை என்றும், விஜயால் எந்தக் காலத்திலும் பிரதமருக்குப் போட்டியிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தவெக ஆட்சியில் விஜய்யைப் பிரதமர் என்கிறார்கள், ஆனால் காங்கிரஸோ ராகுல் காந்தியைப் பிரதமர் என்கிறது. இதனால் தவெக கூட்டணி முரண்பட்ட கூட்டணியாகவே இயங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 30 ஆண்டுகளாகத் தனக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு, தற்போது தவெக ஆட்சி வந்தவுடன் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.

தேசிய தலைவர் ஆவதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும், தற்போதைய சூழலில் விஜய் தனது 5 ஆண்டு கால ஆட்சியைத் திறம்பட நடத்த மட்டுமே முயல வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.