உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் தாயார் காலமானார்!

 

 

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்திரி தேவி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது முதிர்ந்த நிலையில், கடந்த சில காலமாக உடல்நலப் பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்திரி தேவி மறைந்த செய்தி அவரது குடும்பத்தினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாயாரின் மறைவால் யோகி ஆதித்யநாத் மிகுந்த துயரத்தில் உள்ளார். இந்தத் தகவல் வெளியானதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.சாவித்திரி தேவியின் மறைவுக்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.