"எங்கள் மண்ணில் விழுந்த குண்டுகளுக்கு நீங்களே பொறுப்பு!" - 5 அரபு நாடுகளிடம் நஷ்டஈடு கேட்கும் ஈரான்!

 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குத் தங்கள் வான்வெளியையும், ராணுவத் தளங்களையும் பயன்படுத்த அனுமதித்ததாகக் கூறி, 5 அரபு நாடுகளிடம் ஈரான் அதிகாரப்பூர்வமாக இழப்பீடு கோரியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஈரான் கடிதம் எழுதியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 முதல் சுமார் 40 நாட்களாக ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலில் 2,000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்குப் பின்வரும் 5 நாடுகள் மறைமுகமாக உதவின என்பது ஈரானின் குற்றச்சாட்டு.

சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன், ஜோர்டான் ஆகிய நாடுகள் அனைத்தும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய போர் விமானங்கள் தங்கள் எல்லைகளைப் பயன்படுத்தவும், அங்கிருந்த ராணுவத் தளங்கள் மூலம் தாக்குதலை ஒருங்கிணைக்கவும் அனுமதி வழங்கியதாக ஈரான் கூறுகிறது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் நிரந்தரப் பிரதிநிதி அமீர்-சையது இரவானி, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஜமால் பரேஸ் ஆல்ரோவெயி ஆகியோருக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களில், தாக்குதலால் ஈரானின் உள்கட்டமைப்புகள், அணுசக்தி மையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், பொருள் சேதங்கள் மற்றும் மன ரீதியான பாதிப்புகளுக்கு இந்த 5 நாடுகளும் முழுமையான நஷ்டஈடு வழங்க வேண்டும். அண்டை நாடுகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் தங்கள் மண்ணைப் பயன்படுத்த அனுமதித்தது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், இதற்கு அந்த நாடுகள் பொறுப்பேற்க