“உனக்கு அவிழ்க்கத் தானே தெரியும்?’’... முதல்வர் விஜய் குறித்து ஆர்.எஸ்.பாரதி மீண்டும் சர்ச்சைப் பேச்சு!

 

தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசிய விதம் குறித்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய ஆர்.எஸ்.பாரதி, கோப்புகள் மற்றும் அரசியல் விவகாரங்களைக் குறிப்பிட்டு வெளிப்படையாகவும் கடுமையாகவும் விமர்சித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிட்டு அவர் கூறிய சில உவமைகள் மற்றும் வார்த்தைகள் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில் இதுபோன்ற மிரட்டல் அல்லது பூச்சாண்டி வேலைகள் யாரிடமும் பலிக்காது என்றும், அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசும்போது எல்லை மீறக்கூடாது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.