பகீர் வீடியோ!! இளம்பெண் நீர்வீழ்ச்சியில் குதித்து தற்கொலை!!
இன்றைய இளம் தலைமுறை பிள்ளைகளை யாரும் திட்டக்கூடாது. கடிந்து கொள்ளக்கூடாது. அவர்கள் சொல்வதற்கு நோ சொல்லக்கூடாது என்கின்றனர். மீறி திட்டிவிட்டால் அது பெற்றோர்களே ஆனாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகின்றனர். சின்னஞ்சிறு குழந்தை முதல் கேட்பதெல்லாம் கிடைத்து விடுவதால் எல்லாமும் எல்லா நேரமும் கிடைக்கும் என நினைத்தே வாழ்ந்து வருகின்றனர். அப்படி மன அழுத்தம் அதிகமாகும் போது பல விபரீத முடிவுகளையும் எடுத்து விடுகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சித்திரக்கோட் நீர்வீழ்ச்சியில் இளம்பெண் ஜூலை 18ம் தேதி செவ்வாய்க்கிழமை குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்தச் பெண் காப்பாற்றப்பட்டு விட்டார். நீர்வீழ்ச்சியை அடைந்தவுடன் எந்த வித இலக்குமின்றி கால் போன போக்கில் நடந்த அந்த சிறுமி விரைவிலேயே நீர்வீழ்ச்சியின் முனைக்கு சென்று விட்டாள். அங்கு சுற்றியுள்ளவர்கள் அச்சிறுமியின் இந்த செயலைப் பார்த்து அவளை குதிக்க வேண்டாம் என கத்தி கூச்சலிட்டனர். எவருடைய பேச்சையும் கேட்காமல் நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கு இருக்கும் ஒருவர் வீடியோ பதிவு செய்து அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆபத்தான நீர்விழ்ச்சியில் குதித்த அந்தப் பெண், காப்பாற்றப்பட்டு உயிர் பிழைத்துள்ளார். அடிக்கடி மொபைல் போன் பயன்படுத்திக் கொண்டிருப்பதால் தனது பெற்றோர் தன்னை எப்போதும் திட்டிக் கொண்டே இருந்ததாகவும், அதனால் மனமுடைந்து நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்ததாகவும் அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் உரிய புத்திமதிகள் வழங்கி அந்த பெண்ணை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?