43-வது மாடியிலிருந்து குதித்து இளைஞர் தற்கொலை - நொய்டாவில் அதிர்ச்சி!

 

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கடுமையான கடன் நெருக்கடி காரணமாக இளைஞர் ஒருவர் உயரமான கட்டடத்தின் 43-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பவ் என்ற அந்த இளைஞர், தான் வசித்து வந்த உயரமான கட்டடத்தின் 43-வது மாடியில் ஏறி கீழே குதிக்க முயன்றுள்ளார். இதைக் கண்ட பொதுமக்களும் காவல்துறையினரும் அவரை மீட்கவும், கீழே குதிக்க வேண்டாம் என சமாதானப்படுத்தவும் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும், அவர்களின் முயற்சி பலனின்றி அவர் கீழே குதித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அந்த இளைஞர் எத்தகைய கடன் சிக்கல்களில் மாட்டிக்கொண்டார் என்பது குறித்தும், அவரது பின்னணி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.