சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் பலி: மற்றொருவர் படுகாயம்!
Sep 15, 2026, 05:00 IST
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனம் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், பாலத்தின் மீது இருந்து கீழே விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கத்திப்பாரா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் அதிவேகமாக வந்தபோது பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியுள்ளார். இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்றவர் சுமார் 20 அடி உயரமான மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கோர விபத்தில் மற்றொருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கிண்டி காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.