undefined

ரூ.500 கடன் தகராறில் வாலிபருக்கு வெட்டு... நண்பர் கைது!

 
 

 

தூத்துக்குடியில் ரூ.500 கடனை திருப்பி தராததால் ஏற்பட்ட தகாறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.  

தூத்துக்குடி பிரையன்ட் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சதீஷ் (24). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பரான தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த முத்துராஜ் மகன் மூர்த்தி (25) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சதீஷிடம் ரூ.500 கடன் வாங்கி இருந்தாராம். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி ஊருக்கு வந்த வந்த சதீஷ் நண்பர் மூர்த்தியிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டாராம்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி சதீஷை அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் திருமுருகன் மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?