கஞ்சா போதையில் போலீசாரைத் தாக்கிய இளைஞர்கள்... விழுப்புரத்தில் அதிர்ச்சி!
தமிழகத்தில் பரவலாக கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களும், இளைஞர்களும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வரும் போக்கும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான குற்ற செயல்களில் கஞ்சா பழகத்திற்கு அடிமையானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரத்தில் கஞ்சா போதையில் இளைஞர்கள் போலீசாரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் காணை அரசு பள்ளி அருகே சில இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவலர் ராஜேந்திரன் சீருடை அணியாமல் சாதாரண உடையில் அந்தப் பகுதியில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கிருந்த சில இளைஞர்களுக்கும் காவலருக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்து கைகலப்பாக மாறியது.
இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்தனர். பின்னர் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, “கஞ்சா போதையில் இளைஞர்கள் காவலரை தாக்கினர்” என்ற வகையில் செய்திகள் வெளிவந்தன. இதனால் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அந்த வீடியோ குறித்து விழுப்புரம் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர்கள் போதையில் இல்லை என்றும், காவலர் சீருடை அணியாமல் இருந்ததால் அவரை பொதுமக்கள் அடையாளம் காணாமல் தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல், அவர்களை எச்சரித்து மன்னித்து அனுப்பியதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!