கொலை வழக்கின் பரபரப்பு அடங்கல...  ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இளைஞர்கள்!  

 

 

சென்னை திருவொற்றியூரில் பிரதீப் என்ற இளைஞர் நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையின் பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், அதே குடியிருப்புப் பகுதியில் இரண்டு இளைஞர்கள் அளவுக்கு அதிகமான போதையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்துள்ளனர்.

அவர்களைப் பார்த்து பீதியடைந்த பொதுமக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், போதையில் ஆயுதங்களுடன் சுற்றிய அந்த இரண்டு இளைஞர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் தப்பியோடப் பயன்படுத்திய ஆட்டோவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.