நெகிழ்ச்சி... Swiggy டெலிவரி ஊழியருக்கு 5 நட்சத்திர ஹோட்டல் ட்ரீட்! மில்க்ஷேக் வாங்கிக் கொடுத்த யூடியூபர்.. !
சாலையில் சந்தித்த Swiggy Instamart டெலிவரி ஊழியர் ஒருவரை 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அவருடன் மில்க்ஷேக் அருந்திய YouTuber ஜைத் மெஹ்தியின் செயல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.சாலையில் Swiggy Instamart நிறுவனத்தில் டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரை சந்தித்த ஜைத் மெஹ்தி, அவருடன் சிறிது நேரம் பேசியுள்ளார். அப்போது தன்னுடன் 5 நட்சத்திர ஹோட்டலுக்கு வந்து மில்க்ஷேக் அருந்துமாறு அவரை அழைத்துள்ளார்.
எதிர்பாராத வகையில் கிடைத்த இந்த அழைப்பால் அந்த ஊழியர் ஆச்சரியமடைந்த நிலையில், ஜைத் மெஹ்தியுடன் ஹோட்டலுக்குச் சென்றுள்ளார்.5 நட்சத்திர ஹோட்டலின் பிரமாண்டமான சூழலை பார்த்து அந்த ஊழியர் வியந்துள்ளார். பின்னர் இருவரும் ஒன்றாக அமர்ந்து மில்க்ஷேக் அருந்தியுள்ளனர்.இந்த அனுபவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், ஜைத் மெஹ்தி மற்றும் அந்த Swiggy ஊழியரின் சந்திப்பு குறித்து பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
தினசரி வேலைக்காக சாலைகளில் பயணிக்கும் டெலிவரி ஊழியருக்கு, அவருடைய பணிச்சூழலுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு இடத்தில் நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்திருப்பது இந்த வீடியோவின் முக்கிய கவன ஈர்ப்பாக அமைந்துள்ளது.சமூக வலைதளங்களில் பிரபலங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான இதுபோன்ற எதிர்பாராத சந்திப்புகள் தொடர்ந்து கவனம் பெறும் நிலையில், ஜைத் மெஹ்தியின் இந்த வீடியோவும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.