undefined

கடைக்குள் புகுந்து அடாவடி.. பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகள் பறிப்பு.. 3 இளைஞர்கள் கைது! 

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் சாலையில் உள்ள டயர் கடையில் கடந்த 28ம் தேதி கோமதி (39) என்பவர் வியாபாரம் பார்த்து வந்தார். அப்போது, ​​கடைக்குள் புகுந்த 2 பேர், கடையின் ஷட்டரை உள்பக்கமாக இழுத்து மூடிவிட்டு, கோமதியை கத்தியைக் காட்டி மிரட்டி, கழுத்தில் கிடந்த தங்க தாலிச்செயின், வளையல், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, ஷட்டரை திறந்து வெளியே வந்த கோமதி, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். இது குறித்து தகவல் கிடைத்ததும் ஆரம்பாக்கம் போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (35), அமைந்தகரையைச் சேர்ந்த கணேஷ் (34), தாம்பரத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (24) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!