ஜனவரியில் அரையாண்டுத் தேர்வு ? அமைச்சர் அன்பில் மகேஷ்!
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட வடதமிழக மாவட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. பல பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பள்ளிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது.
இதன் காரணாமாக விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் கடலூர், அண்ணா கிராமம், பண்ருட்டி பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் எனக் கூறியுள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாதபட்சத்தில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற இடங்களில் ஏற்கனவே அறிவித்தபடி, அரையாண்டுத்தேர்வு 9ம் தேதி முதல் நடைபெறும். டிச.9க்குள் வெள்ளம் பாதித்த பள்ளிகளில் இயல்பு நிலை திரும்பாவிடில் மாணவர்களுக்கு ஜனவரி முதல் வாரம் தேர்வு நடத்தப்படும்” எனக் கூறியுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!