தொழிலில் விரோதம்.. கட்டின பொண்டாட்டியை காரில் வைத்து எரித்துக் கொன்ற கணவர்!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பத்மராஜன். பேக்கரி நடத்தி வரும் இவருக்கு அனிலா என்ற மனைவி உள்ளார். இந்த பேக்கரியை அனிலா கூட்டாளியுடன் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதற்கு அவரது கணவர் பத்மராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு அனிலா பேக்கரியை மூடிவிட்டு காரில் வீட்டுக்கு சென்றார். அப்போது, பின்னால் காரில் வந்த பத்மராஜன், அனிலாவின் காரை மறித்து, பெட்ரோலை ஊற்றி, தீ வைத்து எரித்தார். இதில் சீட் பெல்ட் அணிந்திருந்த அனிலா காரில் அமர்ந்தபடியே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் அனிலாவுடன் காரில் பயணம் செய்த பெண் ஊழியர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து அனிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு தீக்காயங்களுடன் நின்று கொண்டிருந்த பணிப்பெண் சோனியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பத்மராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!