undefined

மக்கள் வரிப்பணம் ரூ.16 கோடி நாசம்... மூன்றே மாதத்தில் தண்ணீரில் கரைந்த கொடூரம்!

 

அத்தனையும் மக்களின் வரிப்பணம்... ஒண்ணு ரெண்டு கிடையாது... ரூ.16 கோடி. திருவண்ணாமலை மாவட்டம் தென்​பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்​கால் கட்டி புதிதாக திறக்கப்​பட்ட 3 மாதங்​களி​லேயே உயர்​மட்ட பாலம் அடித்​துச் செல்​லப்​பட்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரியாக திட்டமிடப்படாத திராவிட மாடலா? தரமில்லாத பாலம் கட்டி, எப்படி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்? தமிழகத்தில் திறமையான பொறியாளர்கள் கிடையாதா?

மழைக்காலங்களில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்பது பாலத்தை கட்டிய பொறியாளர்கள், திட்டம் வகுத்துக் கொடுத்த அதிகாரிகளுக்கு தெரியாதா?  என்று கண்முன்னே அடுக்கடுக்காக கேள்விகள் வந்து விழுகின்றன.

திரு​வண்ணாமலை மாவட்டம் சாத்​தனூர் அணையி​லிருந்து முன்னறி​விப்​பின்றி நேற்று முன்​தினம் அதிகாலை விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெளி​யேற்​றப்​பட்​டது. இதனால், தென்​பெண்ணை ஆற்றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்பட்டு திரு​வண்ணா​மலை, கள்ளக்​குறிச்சி, விழுப்பு​ரம், கடலூர் ஆகிய 4 மாவட்​டங்​களில், நூற்றுக்​கணக்கான கிராமங்கள் பாதிக்​கப்​பட்டன.

இந்நிலை​யில், தண்ட​ராம்​பட்டு அருகே தென்​பெண்ணை ஆற்றின் குறுக்கே அகரம்​பள்​ளிப்​பட்டு-தொண்​ட​மானூர் கிராமத்தை இணைக்​கும் உயர்மட்ட பாலம் நேற்று முன்​தினம் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டுள்​ளது. நெடுஞ்​சாலைத் துறை சார்​பில் ரூ.15.90 கோடி​யில் 7 மீ. உயரம், 12 மீ. அகலம், 250 மீட்டர் நீளத்​தில், 12 கண்களு​டன்​கட்​டப்​பட்ட இந்தப் பாலம் கடந்த செப். 2-ம் தேதி திறக்​கப்​பட்டது குறிப்​பிடத்​தக்​கது.

இது குறித்து கிராம மக்கள் கூறிய​தாவது: எங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்​றப்​பட்ட மகிழ்ச்சி 3 மாதங்​கள்கூட நீடிக்க​வில்லை. தென்​பெண்​ணை​யில் கடந்த காலங்​களில் திறந்து விடப்​பட்ட அதிகபட்ச தண்ணீர் மற்றும் எதிர்​காலத்​தில் அதி கனமழை பெய்​தால் அணையில் வெளி​யேற்​றப்​படும் தண்ணீரின் அளவு ஆகிய​வற்றை கணக்​கீடு செய்​யாமல் கட்டி​யுள்​ளனர்.

இதனால், ஒருமுறை வந்த வெள்​ளத்​துக்கே தாக்குபிடிக்க முடி​யாமல் பாலம் அடித்து செல்​லப்​பட்​டுள்​ளது. தரமான முறை​யில் பாலம் கட்டப்​பட்டதா என்று சந்தேகம் எழுகிறது. எனவே, வல்லுநர் குழு ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். என்றனர். 

இது தொடர்பாக நெடுஞ்​சாலைத் துறை தலைமைப் பொறியாளர் செ.தேவ​ராசு (நபார்டு மற்றும் கிராம சாலைகள்) வெளி​யிட்டுள்ள செய்திக்​குறிப்​பில், “நீரி​யியல் கணக்​கீட்​டின்படி பாலத்​தின் நீர்​வெளி​யேற்றம் 54,417 கனஅடி​யாகும். புயல் காரணமாக சாத்​தனூர் அணையில் இருந்து தென்​பெண்​ணை​யாற்றில் விநாடிக்கு 2 லட்சம் கனஅடிக்​கும் கூடு​தலாக தண்ணீர் வெளி​யேற்​றப்​பட்​ட​தால், பாலத்​தின் மேற்​பரப்​பில் 4 மீட்டர் உயரத்​தில் தண்ணீர் சென்​றுள்​ளது. தண்ணீரின் அதிக வேகம் காரணமாக பாலம் சேதமடைந்து, போக்கு​வரத்து துண்​டிக்​கப்​பட்​டுள்​ளது” என்று தெரி​வித்​துள்ளார்.

மக்களுக்கு அறிவிக்​காமல்… நீர்​வளத் துறை 1.68 லட்சம் கனஅடி நீர் வெளி​யேற்​றப்​பட்​டதாக தெரிவிக்​கப்​பட்​டிருந்த நிலை​யில், 2 லட்சம் கனஅடிக்கு கூடு​தலாக தண்ணீர் வெளி​யேற்​றப்​பட்டதே காரணம் என்று நெடுஞ்சாலைத் துறை தெரி​வித்​துள்ளது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்​தி​யுள்​ளது.

புயலின் தாக்கம் தீவிரமாக இருக்​கும் என வானிலை மையம் எச்சரித்த பிறகும், சாத்​தனூர் அணையின் நீர்​மட்​டத்​தைக் குறைக்​காமல் பராமரித்துள்ளனர். ஒரே நேரத்​தில் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடிக்​கும் கூடு​தலாக தண்ணீர் திறக்​கப்​பட்​ட​தால் 4 மாவட்​டங்​களில் பா​திப்பு ஏற்பட்டுள்​ளது. மேலும், 2 லட்​சம் க​னஅடிக்கு கூடு​தலாக தண்​ணீர் ​திறக்​கப்​பட்டது குறித்து மக்​களுக்கு அறிவிக்க​வில்லை என்​பதும் குறிப்பிடத்தக்கது.

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!