undefined

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி... போலீசார் விசாரணை!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்தவரை குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர் அமலிநகரைச் சேர்ந்தவர் அருணா (45). இவர் தனது மகன் பிளஸ்டனை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதற்காக முயற்சி செய்து வந்தாராம். இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவானைக்கோவிலைச் சேர்ந்த பிரான்சிஸ் மகன் ஜெயந்தன் என்பவர், துபையில் வேலை வாங்கி தருவதாக அருணாவிடம் கூறினாராம்.

இதைத் தொடர்ந்து பிளஸ்டன் மற்றும் அவரது நண்பர்கள் லிஜோ, டேனிவாஸ், ஆகாஷ் ராஜன் ஆகியோரை துபையில் வேலைக்கு சேர்க்க முயற்சி செய்து உள்ளனர். இதற்காக ஜெயந்தன் 4 பேரிடமிருந்து மொத்தம் ரூ.12 லட்சம் பெற்றுக் கொண்டாராம்.

அதன்பிறகு பிளஸ்டன், லிஜோ ஆகிய 2 பேரையும் சுற்றுலா விசாவில் துபைக்கு அனுப்பி உள்ளார். ஆனால் எந்த வேலையும் வாங்கி கொடுக்கவில்லையாம். மற்ற இருவரையும் துபைக்கு அனுப்பவில்லையாம். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அருணா, இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஜெயந்தன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!