“திருந்தவே மாட்டாங்க...” ரூ.5,000 லஞ்சம் வாங்கிய விஏஓ, தலையாரி கைது - சிவகங்கையில் பரபரப்பு!
Aug 27, 2026, 20:40 IST
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூர் பகுதியில் சக்திவேல் என்பவரிடம் விவசாய நிலக் கணக்கைக் குறிக்கும் அடங்கல் ஆவணத்தைச் சரிசெய்து தருவதற்காக லஞ்சம் கோரப்பட்டுள்ளது. சக்திவேலிடம் முறைப்படி ரூ. 5,000 லஞ்சப் பணம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால் மற்றும் தலையாரி சாந்தி ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்தனர். லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.