இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

 


இந்தியாவில் கொரோனா 2வது அலை அசுர வேகம் எடுத்து பரவி வருகிறது.இதனை கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை என ஐ.சி.எம்.ஆர்.எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தியாவில் ஏற்படும் கொரோனாவைக் கட்டுப்படுத்த பாதிப்புக்களுக்கேற்ப மாநிலங்களை நோய் பரவலுக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. அதன்படி இந்தியாவில் அதிக பாதிப்பு இருக்கும் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதில் மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரள மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மே 24வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதற்கு பிறகு ஊரடங்கு இருக்காது என்றும், அப்படி இருந்தாலும் பொருளாதாரம் பாதிக்காத வகையில் துறைசார்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இந்நிலையில் இந்தியாவில் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அவசியம் எனவும், இந்தியாவில் மொத்தம் உள்ள 700 மாவட்டங்களில் சுமார் 533 மாவட்டங்களில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமான பாதிப்பு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.