டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் அதிரடி நியமனம்!

 


தமிழகத்தில் முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் தடுப்பூசிகள், நீட் தேர்வு ரத்து போன்ற பல கோரிக்கைகளை நேரில் பிரதமரிடம் வலியுறுத்தும் பொருட்டு ஜூன் 17ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருக்கிறார்.


இந்நிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப் பட்டிருப்பதாக தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். ஏ.கே.எஸ்.விஜயனின் பதவிக்காலம் ஒரு ஆண்டாக உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன்17ல் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருக்கும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஏ.கே.எஸ்.விஜயன் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்பவர் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் பாலமாக செயல்படும் பொறுப்பை வகிப்பவர் ஆதலால் இந்த பதவி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.