குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்கிறார்

 

அடுத்த ஆண்டின் இறுதியில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சனிக்கிழமை மாலை குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக குஜராத் மாநில பா.ஜனதா சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில், புதுமுக எம்.எல்.ஏ.வான பூபேந்திர படேல் (வயது 59), குஜராத்தின் புதிய முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

குஜராத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள பூபேந்திர படேல் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்கிறார்.